Advertisment

பயணிகளுக்கு இலவச குடிநீர் வழங்கும் ஆட்டோ ஓட்டுநர்!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையத்திற்கு முன்புறமுள்ள ஆட்டோ நிறுத்ததில் சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கத்தை சேர்ந்த கலைமணி கடந்த பல வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் ஆட்டோவை தேடி வரும் பயணிகளுக்கு, ஆட்டோவின் முன் பகுதியில் குடிநீர் டேங்கை பொருத்தி இலவச குடிநீர் வழங்கி வருகிறார்.

Advertisment

Cuddalore - Auto-Driver providing free drinking water to passengers

இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநர் கலைமணி கூறுகையில் "1 லிட்டர் தண்ணீரை ரூ. 20-க்கு விற்பனை செய்கிறார்கள். வெய்யிலில் தாகம் அதிகம் இருக்கும் 1 லிட்டர் தண்ணீர் பல பேருக்கு பத்தாது. எனவே ஆட்டோ கட்டணத்தை விட குடிதண்ணீருக்கு அதிகசெலவு செய்யக்கூடும். நான் 25லி குடிநீர் கேனை மொத்த விலைக்கு வாங்கி இதில் நிரப்பிகொண்டு அனைவருக்கும் இலவசமாக தண்ணீர் கொடுக்கிறேன்" என்றார்.

Advertisment

சிஐடியு ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் முத்து, இதே போல் அனைத்து ஓட்டுநர்களும் பயணிகளுக்கு தண்ணீர் வழங்க முயன்று வருகிறோம் என்றார்.

auto driver Cuddalore water
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe