ADVERTISEMENT

அப்பர் கரையேறும் ஐதீக நிகழ்ச்சி! திரளான பக்தர்கள் பங்கேற்பு!

02:46 PM May 08, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டை ஆண்ட மகேந்திர வர்ம பல்லவ மன்னர் திருநாவுக்கரசர் என்னும் அப்பர் அடிகளாரை கருங்கல்லில் கட்டி கடலில் வீசினார். அப்போது 'நமச்சிவாய' பதிகம் பாடி அந்த கல்லையே தெப்பமாக கொண்டு அப்பர் கரை சேர்ந்தார் என்பது புராணக்கதை. அந்த இடம் கடலூர் முதுநகர் அருகே புது வண்டிப்பாளையத்தில் உள்ள 'கரையேறவிட்டகுப்பம்' என்று அழைக்கப்படுகிறது.

அப்பர் கரையேறிய இடத்தில் அவருக்கு தனியாக கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் அப்பர் கரையேறும் ஐதீக நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று காலை பாடலீஸ்வரர், பெரியநாயகி, சந்திரசேகர், அப்பர் அடிகளார் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க கைலாய வாத்தியங்கள் ஒலிக்க பாடலீஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும் அப்பர் வெள்ளி விமானத்திலும் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வண்டிப்பாளையம் வந்தடைந்தனர்.

அங்கு வண்டிப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அப்பர் கரையேறிய இடத்தை வந்தடைந்தார். தொடர்ந்து பதிகம் பாடி அப்பர் கரையேறிய ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்பர் தெப்பத்தில் வலம் வந்தார். பிறகு அப்பர் கரையேறும் நிகழ்வு அங்குள்ள மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதன் பிறகு பாடலீஸ்வரர், பெரியநாயகி, விநாயகர் சுவாமிகள் அப்பருடன் கோயிலை வந்தடைந்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT