Advertisment

புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவுக்கு முதல் பலி! கடலூரில் கரோனா பாதிப்பு 15 ஆக உயர்வு!!

புதுச்சேரி மாநிலம் கேரளா எல்லைக்குட்பட்ட மாஹே பகுதியை சேர்ந்த 71 வயது முதியவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு ஜிப்மர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (11/04/2020) உயிரிழந்தார். இந்த தகவலை அம்மாநில சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

Advertisment

cuddalore and puducherry coronavirus strength increased

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார். இதில் காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

இதனிடையே புதுச்சேரி எல்லைப்பகுதியில் உள்ள தமிழக பகுதியை சேர்ந்தவர்கள் புதுச்சேரிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியின் மாநிலத்தின் நான்கு எல்லை பகுதியிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

coronavirus Cuddalore district Puducherry
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe