கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த திருவதிகையைச்சேர்ந்தவர் சக்கரவர்த்தி, இவர் பண்ருட்டி அ.தி.மு.க எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர். அதே பகுதியைச் சேர்ந்தவர் தஷ்ணாமூர்த்தி, இவர் தமிழக அமைச்சர் எம்.சி.சம்பத்தின் ஆதரவாளர். இவர்கள் இருவருக்கும் கடந்த பத்து வருடங்களாக முன்விரோதம் இருந்து வந்தது. மேலும் ஒரு மாதத்துக்கு முன்பு இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பலர் படுகாயம் அடைந்ததால் சுமார் 10- க்கும் மேற்பட்டோர் மீது பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுத்தனர்.

cuddalore admk party leaders police investigation

Advertisment

இந்த நிலையில் சக்கரவர்த்தி ஆதரவாளர்களான சுண்ணாம்புகாரர் தெருவைச் சேர்ந்த ரவி மகன் மணிகண்டன்(26) மற்றும் மாரியப்பன் மகன் பாலாஜி (22) ஆகிய இருவரும் நேற்று (14/04/2020) நள்ளிரவில் நிலத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தனர். அப்போது தஷ்ணாமூர்த்தி ஆதரவாளர்கள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சென்று மணிகண்டன் மற்றும் பாலாஜியை சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பலியானார்கள்.

cuddalore admk party leaders police investigation

Advertisment

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பண்ருட்டி போலீசார், உடலைக் கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இருதரப்பு மோதல் மற்றும் இரட்டைக்கொலையை அடுத்து அப்பகுதியில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.