Advertisment

 மணிமுத்தாற்றில் மணல் கடத்திய எட்டு மாட்டு வண்டிகள் பறிமுதல்! 4 பேர் கைது! 

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மணிமுத்தாற்றில் அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் கடத்துவதாக விருத்தாச்சலம் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல்துறையினர் நாச்சியார் பேட்டை மேம்பாலம் அருகே மணல் கடத்தி வந்த எட்டு மாட்டு வண்டிகளை மடக்கி பிடிக்கும்போது, நான்கு மாட்டு வண்டிகள் ஓட்டி வந்த மர்ம நபர்கள் சம்பவ இடத்திலேயே வண்டியை விட்டுவிட்டு, மாடுகளை மட்டும் அவிழ்த்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

Advertisment

m

பிடிபட்ட கோபுராபுரம் கிராமத்தை சேர்ந்த நான்கு பேருடன் மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்து, விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் தப்பிச் சென்ற நான்கு பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். மாடுகள் இல்லாததால், நான்கு வண்டிகள் நாச்சியார்பேட்டை பகுதியில் போலீஸ் பாதுகாப்புடன் நிற்கின்றன.

Advertisment

m

Cuddalore
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe