Advertisment

 மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க மாதிரி தேர்தல்! ஆர்வமுடன் வாக்களித்த மாணவர்கள்! 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பூதாமூர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பயிலும் நான்காம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்குள் மாதிரி பள்ளி பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது.

Advertisment

s

இதில் பிரதமந்திரி, நிதித்துறை, கல்வித்துறை, உணவுத்துறை, பாதுகாப்பு துறை, போக்குவரத்து துறை, உள்ளிட்ட துறைகளுக்கு மாணவ மந்திரிகளை தேர்ந்தெடுக்க மாதிரி தேர்தல் சாவடி அமைக்கப்பட்டது. இத்தேர்தலானது வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்பட்டது.

இதற்காக முன்கூட்டியே மாணவர்களுக்கு மாதிரி தேர்தல் குறித்து விளக்கப்பட்டு ஜனநாயகத்தில் அனைவரும் சமம் என்ற நோக்கத்தின் அடிப்படையில், பள்ளியில் படிக்கும் காலத்திலேயே மாணவர்கள் தங்களுக்கு தேவையான மக்கள் பிரதிநிதியை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கான வழிமுறைகள் என்னென்ன இருக்கிறது என்பது குறித்து விளக்கப்பட்டது.

Advertisment

s

மாணவர்களில் பிரதம மந்திரி உள்ளிட்ட ஆறு துறைகளுக்கு மந்திரிகளை தேர்ந்தெடுக்கும் விதமாக ஒவ்வொரு துறைக்கும் இரண்டு பேர் வீதம் 12 பேர் போட்டியிட்டனர்.

போட்டியாளர்கள் மாணவர்களுக்கிடையே தாங்கள் எந்தத் துறைக்கு போட்டியிடுகிறோம் என்றும், தாங்கள் வெற்றி பெற்றால் பள்ளிக்குள் என்னென்ன திட்டங்களை செயல்படுத்தி நடை முறைப்படுத்துவோம் என்பது குறித்தும் கல்வி, சாலை பாதுகாப்பு, பள்ளி வளாகத்தின் சுகாதாரம், உணவு போன்ற துறைகளில் பள்ளிக்குள் எந்தெந்த வகையில் நன்மைகள் செய்ய முடியும், மாணவர்களுக்கு ஒழுக்கத்தை எப்படி வளர்க்க முடியும் என்பது குறித்து விளக்கிகூறி அவர்கள் தங்களுக்கு வாக்களிக்கும்படி பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

இதன் இறுதியாக மாதிரி தேர்தல் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் மீனாம்பிகை மற்றும் பள்ளி ஆசிரியர்கள் தேர்தலை மேற்பார்வையிட்டனர். தேர்தலை மாணவ, மாணவிகளே நடத்தினர். வாக்குச்சாவடி தலைமை அலுவலராக மாணவி அஞ்சலி, வாக்குச்சாவடி அலுவ லர்களாக மதுஸ்ரீ, சந்தோஷ்குமார், ஸ்ரீஹரிணி, காவலராக குமரன் ஆகியோர் செயல்பட்டு தேர்தலை நடத்தினர்.

அனைத்து மாணவர்களும் வாக்கு சாவடிக்கு சென்று, அடையாள அட்டையை சரி பார்த்து, கைகளில் மையிட்டு, வாக்குகளை பதிவு செய்து, வாக்கு பெட்டியில் போட்டனர். இந்நிகழ்ச்சியால் இந்திய தேர்தல் நடைபெறும் விதம் குறித்தும், பள்ளி பருவத்திலேயே ஓட்டு போடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டதால் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியாக அடைந்தனர்.

school
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe