Advertisment

இருளர் இனமக்கள் சாதி சான்று கேட்டு சாலைமறியல் போராட்டம்

சிதம்பரம் அருகே இருளர் இன மக்கள் சாதி சான்றிதழ் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

k

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சி பகுதியில் உள்ள எம்ஜிஆர் நகர், தளபதி நகர், கலைஞர் நகர், சிசில் நகர் ஆகிய பகுதிகளில் இருளர் பழங்குடியினர் சமூகத்தை சார்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் இருளர் பழங்குடியினர் மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கக் கோரி பல ஆண்டுகளாக சம்பந்தபட்ட அதிகாரிகளிடத்தில் மனுகொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Advertisment

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிகளில் வசிக்கும் இருளர் பழங்குடி சமூக மக்கள் அவர்களின் பிள்ளைகளுடன், பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுடன் கிள்ளை நகர திமுக செயலாளர் கிள்ளை இரவீந்திரன் தலைமையில் பேரூராட்சி அலுவலகம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைதொடர்ந்து அருகிலுள்ள கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் விசாரணை செய்து சாதி சான்றிதழ் இல்லாத அனைவருக்கும் உடனே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனால் போராட்டம் தற்காலிகமாக விலக்கிகொள்ளப்பட்டது.

killed
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe