கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அம்மன் கோவில் தெருவைத் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரின் மகள் திலகா (19). இவர் விருத்தாசலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை தனது வீட்டில் தனியாக இருந்த போது, வீட்டினுள் புகுந்த மர்ம நபர் வயிற்றுப் பகுதி மற்றும் கைகளில் கத்தியால் குத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளார்.

ட்

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

உயிருக்கு போராடிய நிலையில் இருந்த திலகா, தனது மாமன் மகேந்திரனுக்கு போன் செய்து கத்தியால் குத்தி விட்டனர் என்று தொலைபேசி மூலம் அழைத்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த அப்பெண்னின் மாமன் மற்றும் அவரது பெற்றோர் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ட்

இதுகுறித்து வழக்குப் பதிந்த கருவேப்பிலங்குறிச்சி பேரளையூரை சேர்ந்த அன்பழகன் மகன் ஆகாஷ்(19) எனும் இளைஞரை கைது செய்தனர். ஒருதலை காதலால் கொலையா.... என காவல் துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.