பட்டா மாற்ற  20 ஆயிரம் லஞ்சம்- விஏஓ கைது

arr

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் நிலம் வாங்கியுள்ளார். இந்த நிலத்தை பட்டா மாற்றம் செய்து கொடுக்ககோரி பரங்கிப்பேட்டை கிராம நிர்வாக அதிகாரியான இளங்கோவனிடம் மனு அளித்துள்ளார். அதற்கு ரூ20 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தான் பட்டா மாற்றம் செய்து கொடுக்க முடியும் என்று இளங்கோவன் கூறியுள்ளார்.

இதனால் மனமுடைந்த அவர் கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளார். அதன் பேரில் அவர்கள் கொடுத்த ஆலோசனையின் பேரில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இளங்கோவனிடம் கணேசன் லஞ்ச பணத்தை கொடுத்தபோது லஞ்சஒழிப்புத்துறை ஆய்வாளர் திருவேங்கடம் தலைமையிலான காவல்துறையினர் மறைந்திருந்து இளங்கோவனை பிடித்து கைது செய்துள்ளனர்.

arrest
இதையும் படியுங்கள்
Subscribe