Advertisment

தாங்கள் படித்த அரசு பள்ளியை சீரமைத்து அசத்திய முன்னாள் மாணவர்கள்!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பரவளூர் கிராமத்தில் அரசுஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

Advertisment

GOVT SCHOOL

இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து, பள்ளிக் கட்டிடங்களை சீரமைத்து, வண்ணங்கள் பூசியும், பூங்காக்கள் அமைத்தும், மாணவர்களுக்கு தேவையான கழிப்பறை வசதிகளையும் செய்து கொடுத்துள்ளனர்.

இதற்காக உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வேலை செய்யும் முன்னாள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து 1.30 லட்சம் மதிப்பில் சீரமைத்துள்ளனர். மேலும் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், கல்வி உபகரணங்களை சீர்வரிசையாக பொதுமக்கள், இளைஞர்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர். அவர்களை பள்ளி ஆசிரியர்கள் வரவேற்றனர். இந்நிகழ்ச்சியை கண்டு முன்னாள் மாணவர்களை அனைவரும் பாரட்டினர்.

cudalore student former Govt.schools
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe