Skip to main content

வீடு வாடகை கேட்பது போல்  பெண்ணை தாக்கி  நகை பறித்த இருவருக்கு பொதுமக்கள் தர்ம அடி

Published on 29/10/2018 | Edited on 29/10/2018
chi

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம்  நாட்டுத்தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற பெண் தலைமை ஆசிரியர் ஜெயலட்சுமி (70) என்பவர் கணவனை இழந்து தனியாக வசித்து வந்தார். இதனையறிந்த மூன்று பேர் அவரிடம் வீடு வாடகைக்கு கேட்பது போல் வந்து பேச்சு கொடுத்துள்ளனர். பின்னர் அந்தப் பெண்ணிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார்கள். அவர் தண்ணியை எடுக்க செல்லும்போது அவரது வாயை பொத்தி கட்டையால் தாக்கி நகை பறிக்க முயற்சி செய்துள்ளனர்.

 

வலி தாங்க முடியாமல் அந்த பெண் அதிகம் சத்தம் போட்டு கத்தினர். இதனையறிந்த பொதுமக்கள் திரண்டு இருவரை பிடித்து விட்டனர். ஒருவன் தப்பி விட்டான். பிடிப்பட்டவர்களை கை, கால்களை கட்டி வைத்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர்.

 

இதனை அறிந்த சிதம்பரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த ஜெயலெட்சுமி, குற்றவாளிகள் கண்ணன், ராஜா ஆகிய இருவரையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்