கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் இவர் அப்பகுதியில் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது இருசக்கர வாகனம் சரி செய்வதற்காக அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர்எஞ்சின் இல்லாத இருசக்கர வாகனத்தை தள்ளி வந்துள்ளார். அவரை வாகனத்தை ஓரம் கட்டும் படியும், ஏன் தலைகவசம் இல்லை என்று கேட்டு பின்னர் அபராதம் விதித்துள்ளார்.

Advertisment

Fined for engine less bike... Viral Video

அதற்கு அந்த வாலிபர் எஞ்சின் இல்லாத இருசக்கர வாகனத்திற்கு அபராதம் போட்டது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இருசக்கர வாகனத்தில் எஞ்சின் இருந்தால் மட்டுமே மோட்டார் வாகன சட்டம் பொருத்தும் என்ற நிலையில் இப்படிஎஞ்சின் இல்லாத வண்டிக்குபோலீசார் எப்படி அபராதம் விதித்தனர் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.