Advertisment

திருச்சி காவல்துறையைக் கலங்கடிக்கும் போலி கையெழுத்து விவகாரம்!

trichy cantonement police station

Advertisment

திருச்சி மாநகரில் 14 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள், 6 குற்றப்பிரிவு காவல் நிலையங்கள், 6 மகளிர் காவல் நிலையங்கள், இரண்டு போக்குவரத்துக் காவல் நிலையங்கள்எனப் பல்வேறு காவல் நிலையங்களில் உள்ளன.

இதில் கன்டோன்மென்ட் காவல்நிலையத்தில் குற்ற வழக்கு ஒன்றில் புகார்தாரர் பெயரில் சி.எஸ்.ஆர். எனப்படும் முதல் தகவல் அறிக்கை போடப்பட்டது. இதில் பெண் உதவி ஆய்வாளர் ஒருவரின் கையொப்பம் போடப்பட்டிருந்தது. இதுகுறித்து விசாரணை நடந்தபோது சி.எஸ்.ஆரில் இருந்தது பெண் உதவி ஆய்வாளர்கையெழுத்து இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இதனால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து சி.எஸ்.ஆர்.இல் இருப்பது யார் கையெழுத்து என்பது குறித்துதீவிர விசாரணை நடந்து வருகிறது.

Advertisment

காவல் நிலையத்தில் உள்ள சி.எஸ்.ஆர்.-இல் உதவி ஆய்வாளரின் கையெழுத்தைப் போலியாகப் பதிவு செய்தது திருச்சி காவல்துறையினர் இடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe