Advertisment

7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; சுவர் இடுக்கில் சிக்கியவனுக்குத் தர்ம அடி

 cruel man caught in the wall; incident in pazhani

Advertisment

பழனியில் 7 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரைப்பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ராஜபுரம் பகுதியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை அந்தப் பகுதிக்குவந்த ஆசாமி ஒருவர் தூக்கிச் சென்று அடைத்து வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். சிறுமி அலறும் சத்தத்தைக் கேட்டு சிலர் அங்கு ஓடி வந்த நிலையில், அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். அந்தப் பகுதி பொதுமக்கள் அந்த நபரைத்துரத்திக் கொண்டே சென்ற நிலையில், இரு சுவர்களுக்கு இடையே உள்ள சந்தில் நுழைந்து தப்பிக்க முயன்ற அந்த நபர் சுவரின் இடுக்கில் சிக்கிக்கொண்டார்.

தொடர்ந்து விரட்டிப் பிடித்த பொதுமக்கள், சுவருக்கு இடையே சிக்கிக் கொண்டிருந்த அந்த நபரைப் பிடித்து வெளியே இழுத்துதர்ம அடி கொடுத்தனர். உடனடியாக போலீசாருக்குத்தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த நபரின் பெயர் முருகன் எனத்தெரிய வந்தது. காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ளார். பழனியில் பட்டப் பகலில் நிகழ்ந்த இந்தசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

police pazhani
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe