crpf soldier from Tamil Nadu was passed away in an incident in Chhattisgarh

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கணவாய்மோட்டூர்பகுதியைச் சேர்ந்த விவசாயி செங்கப்பன் என்பவரது மூத்த மகன் கோகுல். இவர் மும்பையில் துணை ராணுவ வீரராகப் பணியாற்றி வருகிறார். இவரது இரண்டாவது மகன் தேவன் (30) சத்தீஸ்கர் மாநிலத்தில் CRPF வீரராகப் பணியாற்றி வந்தார்.

Advertisment

இதனிடையே சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் மூன்று சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழந்தனர். அதில் குடியாத்தம் கணவாய் மோட்டூர் பகுதியைச் சேர்ந்த தேவன் குண்டு வெடிப்பில் பலியானார். இதனையடுத்து அவரது உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு அவருடைய சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட்டது. இதனிடையே தேவன் உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினரிடையேபெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

crpf soldier from Tamil Nadu was passed away in an incident in Chhattisgarh

வீர மரணம் அடைந்த சி.ஆர்.பி.எஃப் வீரரின் உடலுக்கு வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன், வேலூர் மாவட்ட ஆட்சியர்சுப்புலட்சுமிஆகியோர் மலர் வளையும் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் சி.ஆர்.பி.எஃப் சவுத் ஐ.ஜி ஷாரு சின்ஹா தலைமையில் 50க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கலந்துகொண்டு துணை ராணுவத்தினர் அணி வகுப்புடன் உடலை எடுத்துக்கொண்டு அவருடைய விவசாய நிலத்திலேயே 21 குண்டு முழங்க நல்லடக்கம் செய்தனர்.