Advertisment

ஓடும் ரயிலில் குடிபோதையில் ரகளை - சி.ஆர்.பி.எப் வீரர் கைது!

jlk

குடி போதையில் ரயில் பயணிகளை ஆபாசமாகத்திட்டிய சி.ஆர்.பி.எப் வீரரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

நேற்று இரவு குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் போதையில் ரகளை செய்த சி.ஆர்.பி.எப் வீரர் தொடர்பாக பயணிகள் புகார் செய்ததை அடுத்து ரயில்வே போலீசார் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையை சேர்ந்த அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்திய நிலையில் அந்த ரயிலில் பயணித்துள்ளார். எஸ்-10 கோச்சில் பயணித்த அவர், உடன் பயணித்த பயணிகளை ஆபாசமாகப் பேசியுள்ளார். இதனால் அதிருப்தியான பயணிகள் அவரை வீடியோ எடுத்து ட்விட்டர் மூலம் ரயில்வே நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisment

Train
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe