CRPF cop passes away fell down in train coimbatore

ஒடிசாவில் சேர்ந்தவர் பாரத் சந்திர பிகரா (37). இவர், கோவை தொப்பம்பட்டி பகுதியில் உள்ள சி.ஆர்.பி.எஃப். முகாமில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த மாதம் 15 நாட்கள் விடுமுறை எடுத்து தனது சொந்த ஊரான ஒடிசாவிற்கு சென்றார்.

Advertisment

பின்னர் விடுமுறை முடிந்து நேற்று பணியில் செல்வதற்காக ஊர் திரும்பினார். அதற்காக ஒடிசாவில் இருந்து காட்பாடிக்கு ரயிலில் வந்தார்.அங்கிருந்து கோவைக்கு முன்பதிவு செய்யப்பட்ட சிறப்பு ரயிலில் பயணம் செய்தார்.

Advertisment

ரயில் வடகோவை அருகே வந்தது, அப்போது அவர் இறங்குவதற்காக தனது உடமைகளை எடுத்துக்கொண்டு கதவருகே வந்து நின்றார்.ரயில் வடகோவை வந்ததும் அவர் ரயில் நிற்பதற்கு முன்பு வண்டியிலிருந்து இறங்க முயற்சி செய்தார்.இதில் அவர் எதிர்பாராதவிதமாக தடுமாறி விழுந்தார்.

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.