Crowds thronged to buy cookers; Fainted old lady

Advertisment

சென்னையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் கொடுக்கப்பட்ட குக்கரைவாங்க முண்டியடித்ததில் மூதாட்டி ஒருவர் மயக்கமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை ராமாபுரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளையொட்டி திமுக சுற்றுச்சூழல் அணி சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஸ்கூட்டர், குக்கர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் பெண்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கான டோக்கன்கள் முன்னரே வழங்கப்பட்ட நிலையில் நிகழ்ச்சியின் இறுதியில் குக்கர் வழங்கப்பட்டது.

அப்பொழுது டோக்கன் வாங்கிய பெண்கள்முண்டியடித்துக்கொண்டு திரண்டனர். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூதாட்டி ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அங்குபாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மூதாட்டியை மீட்டு முதல் உதவி அளித்தனர்.