Advertisment

ஒரே நாளில் குவிந்த கூட்டம்; உதகையில் போக்குவரத்து நெரிசல்

 Crowds gathered in one day; Traffic jam in the ooty

Advertisment

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்ச்சத்து குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலாத்தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் மலைப் பிரதேசமான உதகைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரத்தொடங்கியுள்ளனர்.கடந்த இரண்டு நாட்களாகவே சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், தற்போது இன்று அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் உதகையில் குவிந்துள்ளனர். இதனால் உதகையில் நகர்ப் பகுதியில் சுற்றுலா வாகனங்கள் அணிவகுத்ததால் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களில் ஒரு வழிச்சாலையாக நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சாலைகள் மாற்றப்பட்டாலும் போக்குவரத்து நெரிசல் என்பது அதிகரித்து வருகிறது. உதகை தாவரவியல் பூங்கா சாலை, தொட்டபெட்டா சாலை, கூடலூர் சாலை, பேருந்து நிலையம் செல்வதற்கான சாலை என அனைத்து சாலைகளிலும் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும் சுற்றுலா பயணிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

ooty traffic
இதையும் படியுங்கள்
Subscribe