ரிச்சி தெருவில் குவிந்த வாடிக்கையாளர்கள்!! (படங்கள்)

இந்தியா முழுவதும் கரோனா இரண்டாம் அலையின் பரவல் அதிகமாக இருந்ததால் கடந்த மாதம்வரை பல மாநிலங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதேபோல் தமிழ்நாட்டிலும் கடந்த மாதம் மே 10ஆம் தேதி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டது.

அதன் பின்பு கரோனாவின் வீரியம் அதிகமானதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வணிக நிறுவனங்கள், கடைகள் என அனைத்தும் மூடப்பட்டதால் பெரும் நெருக்கடியைச் சந்தித்தனர். அதேபோல் இந்தக் காலகட்டத்தில் மின்னணு சாதனங்களின் உபயோகங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளதால் அதில் பழுதுகள் ஏற்படுவதும் அதிகமாக இருந்துவருகிறது.

கடந்த ஜூன் 14ஆம் தேதிக்குப் பிறகு மின்னணு பழுது நீக்கும் கடைகளைத் திறக்க அனுமதி அளித்துள்ள நிலையில், அந்தக் கடைகளில் மக்களின் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. அந்த வகையில் சென்னை ரிச்சி தெருவில் நீண்ட நாட்களுக்குப் பின்பு செல்ஃபோன்கள் பழுது பார்க்கும் கடைகள் திறக்கப்பட்டதால் மக்கள் குவிந்தனர்.

bazaar Chennai streets
இதையும் படியுங்கள்
Subscribe