Published on 08/01/2022 | Edited on 08/01/2022

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் உள்ளிட்ட அறிவிப்புகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதேபோல் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள், பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாளை ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் என்பதால், சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்டில் இன்று காலை முதலே மக்கள்கூட்டம் அலைமோதுகிறது. பொதுமக்கள், சிறுவியாபாரிகள் என கூட்டம் அதிகமாக உள்ளது. வஞ்சிரம் கிலோ- 700 ரூபாய்க்கும், சங்கரா-600 ரூபாய், கடம்பா-350 வரை விற்பனை ஆகிறது.