Advertisment

கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில் நான்கு நாட்கள் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதேபோல் சேலம் மற்றும் திருப்பூர் ஆகிய இரண்டு மாநகராட்சிகளில் மூன்று நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. ஊரடங்கின்போது, பால் மற்றும் இதரஅத்தியாவசிய மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் மூடப்பட்டிருக்கும் என்பதால் மக்கள் நான்கு நாட்களுக்கு தேவையான பால் பாக்கெட்டுகளை வாங்க சென்னை ராஜாஜி சாலையில் உள்ள ஆவின் பாலகத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச்சென்றனர்.