Skip to main content

 2000 முதலைகளை வைத்து எடுக்கப்பட்ட முதல் சினிமா!

Published on 05/07/2019 | Edited on 05/07/2019

 


இந்தியாவிலேயே முதன் முறையாக 2000 முதலைகளை வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் என்ற அறிவிப்போடு வருகிறது“ ஆண்கள் ஜாக்கிரதை . இப்படம் குறித்து இயக்குநர் முத்துமனோகரன்,    ‘’இந்தியாவிலேயே முதன் முறையாக 2000 முதலைகளை வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் இது. ஒரு கோடிக்கு அதிகமாக செலவிட்டு  2000 முதலைகளை 15 நாட்களாக ஒரே இடத்தில் வைத்து அவைகளுக்கு உணவாக சிக்கன், மாட்டிறைச்சி போன்றவற்றை டன் கணக்கில் போட்டு அவைகளை தண்ணீருக்குள் இருந்து வெளியே வரவைத்து மிகவும் சிரமப்பட்டு எடுத்தோம்.

 

ச்

கிளைமாக்ஸ் காட்சியில் அனைத்து முதலைகளும் ஒன்றாக சேர்ந்து வருவது போல் ஒரு காட்சி இருக்கிறது அந்த காட்சியை திரையில் பார்க்க படு பயங்கரமாக இருக்கம் அதுதான் இந்த படத்தின் ஹைலைட் காட்சி. படம் விரைவில் வெளியாக உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

 

ச்


 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் அருகே வீட்டிற்குள் புகுந்த முதலை!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
 crocodile entered a house near Chidambaram

சிதம்பரம் அருகே நாஞ்சலூர் கிராமத்தில் வசிப்பவர் அப்துல் ரஷீத். இவரது வீட்டில் திங்கள்கிழமை அதிகாலை குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இவர் அதிகாலையில் எழுந்து வெளியே வந்தபோது வீட்டு வாசலில் முதலையைப் பார்த்துள்ளார். முதலையைப் பார்த்து சத்தம் போட்டதால் உடனடியாக குடும்பத்தினர் அனைவரும் எழுந்து கூச்சலிட்டனர். உடனே அப்பகுதியில் இருந்தவர்கள் அவரது வீட்டிற்கு வந்து பார்த்தபோது, முதலை இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து சிதம்பரம் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

இந்த தகவலின் பேரில் வனத்துறையினர் சிதம்பரம் வனவர் பிரபு தலைமையிலான வனத்துறையினர் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு வந்து 8 அடி நீளமும் 110 கிலோ எடையும் கொண்ட முதலையை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் உதவியுடன் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து முதலையைப் பத்திரமாக சிதம்பரம் அருகே உள்ள வக்ரமாரி ஏரியில் விட்டனர். முதலையைப் பிடித்ததால் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர். 

Next Story

துரத்திய நாய்; பயந்து தண்ணீரில் இறங்கிய முதலை

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
The dog that chased the crocodile; A scared crocodile got into the water

சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதிக கனமழை பெய்தது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆறு, குளம் மற்றும் வாய்க்கால்கள் நிரம்பி வழிகிறது. இதனையொட்டி சிதம்பரம் அருகே உள்ள துணிசிரமேடு கிராமத்தின் அருகே ஓடும் வாய்க்காலில் அதிகளவு மழை நீர் செல்கிறது.

இந்நிலையில் இந்த வாய்க்காலில் வரும் தண்ணீரில் முதலைக்குட்டி ஒன்று அடித்து வந்துள்ளது. இந்த முதலை குட்டி வாய்க்காலின் கரையில் வியாழக்கிழமை மதியம் இரைதேடி படுத்திருந்துள்ளது. இதனை வாய்க்கால் கரையில் வந்த நாய் ஒன்று பார்த்து முதலையை கவ்வி பிடிக்க ஓடியது.  முதலை குட்டி நாய் வருவதை அறிந்து பயந்து போய் வாய்க்கால் தண்ணீரில் இறங்கியது. இதனை அப்பகுதியில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து வைரல் ஆக்கி வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் வனத்துறையினர் வாய்க்கால் மற்றும் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் முதலை மற்றும் முதலை குட்டிகள் தங்கி இருக்கும் வாய்ப்பு உள்ளது எனவே பொதுமக்கள் கால்நடைகள் வாய்க்காலில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.