Published on 15/11/2021 | Edited on 15/11/2021

திருச்சி, எடமலைப்பட்டிபுதூர் அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகர் பகுதியைக் கடந்து செல்லும் கோரையாற்றை சுத்தம் செய்யும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டனர். அப்போது, கோரையாற்று கரையில் முதலைக் குட்டி படுத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அதைப் பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். ஏற்கனவே திருச்சியில் உய்யகொண்டான் கால்வாயில் முதலை நடமாட்டம் இருப்பதாக அடிக்கடி பொதுமக்கள் மத்தியில் பீதி கிளம்பிவரும் நிலையில், தற்போது கோரையாற்றில் முதலை நடமாட்டம் இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.