/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/993_204.jpg)
சிதம்பரம் அருகே ஊருக்குள் முதலை புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சிதம்பரம் அருகே வால்கரமேடு கிராமத்தில் வெள்ளிக்கிழமை(27.10.2023) அதிகாலையில்,சுமார் 8 அடி நீளமுள்ள 90 கிலோ மதிக்கத்தக்க முதலை ஒன்று ஊருக்குள் புகுந்துள்ளது. இது குறித்து கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் கடலூர் மாவட்ட வன அலுவலர் குருசாமி உத்தரவின்படி, சிதம்பரம் பிரிவு வனவர் பிரபு தலைமையில், புவனகிரி பீட் வனக் காப்பாளர் ஞானசேகர், வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் முதலையைப் பத்திரமாகப் பிடித்தனர். பின்பு வக்கிரமாரி ஏரியில் முதலை விட்டதைத்தொடர்ந்து கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)