Advertisment

பள்ளிக்குள் புகுந்த முதலை; அதிர்ந்த ஊர் மக்கள்

The crocodile entered the school; the people of the town were shocked

Advertisment

சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பு பகுதியில் உள்ள மழவராயநல்லூர் கிராமத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 9 அடி நீளமுள்ள 200 கிலோ மதிக்கத்தக்க முதலை ஒன்று புகுந்ததாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சிதம்பரம் வனத்துறையினருக்கு புதன்கிழமை தகவல் அளித்தனர்.

The crocodile entered the school; the people of the town were shocked

அதன் பேரில் சிதம்பரம் வனப்பிரிவு அலுவலர் பிரபு தலைமையில் புவனகிரி வனக்காப்பாளர் ஞானசேகர், சிதம்பரம் வனக்காப்பாளர் அன்புமணி, அமுதப் பிரியன் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று பொதுமக்கள் உதவியுடன் முதலையின் முகத்தின் மீது ஈர சாக்கைப் போட்டு பின்னர் அது நகராதவாறு கயிற்றால் கட்டினர். பின்னர் முதலையை சிதம்பரம் அருகே உள்ள வக்கராமாரி ஏரியில் பத்திரமாக விட்டனர். பள்ளி விடுமுறை என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் மழவராயநல்லூர் கிராம மக்கள் வனத்துறையினருக்கு நன்றியைத்தெரிவித்துக் கொண்டனர்.

rescued crocodile CHITHAMPARAM
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe