Skip to main content

பள்ளிக்குள் புகுந்த முதலை; அதிர்ந்த ஊர் மக்கள்

Published on 03/05/2023 | Edited on 03/05/2023

 

The crocodile entered the school; the people of the town were shocked

 

சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பு பகுதியில் உள்ள மழவராயநல்லூர் கிராமத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 9 அடி நீளமுள்ள 200 கிலோ மதிக்கத்தக்க முதலை ஒன்று புகுந்ததாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சிதம்பரம் வனத்துறையினருக்கு புதன்கிழமை தகவல் அளித்தனர்.

 

The crocodile entered the school; the people of the town were shocked

 

அதன் பேரில் சிதம்பரம் வனப்பிரிவு அலுவலர் பிரபு தலைமையில் புவனகிரி வனக்காப்பாளர் ஞானசேகர், சிதம்பரம் வனக்காப்பாளர் அன்புமணி, அமுதப் பிரியன் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று பொதுமக்கள் உதவியுடன் முதலையின் முகத்தின் மீது ஈர சாக்கைப் போட்டு பின்னர் அது நகராதவாறு கயிற்றால் கட்டினர். பின்னர் முதலையை  சிதம்பரம் அருகே உள்ள வக்கராமாரி ஏரியில் பத்திரமாக விட்டனர். பள்ளி விடுமுறை என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் மழவராயநல்லூர் கிராம மக்கள் வனத்துறையினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தேர் திருவிழா கோலாகலம்

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
Ani Thirumanjana Chariot Festival in Nataraja Temple

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுக்கு இருமுறை தேர் மற்றும் தரிசன விழா நடைபெறுவது வழக்கம்.  இதில் ஆனி மாதத்தில் நடைபெறும் திருவிழாவிற்கு ஆனி திருமஞ்சனம் என்றும், மார்கழி மாதத்தில் நடைபெறும் விழாவிற்கு ஆருத்ரா தேர் மற்றும் தரிசன விழா ஆகும்.

இந்நிலையில் ஆனி மாதத்திற்கான ஆனித் திருமஞ்சன தேர் மற்றும் தரிசன விழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினம் தோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்ற நிலையில்  பஞ்ச மூர்த்தி சாமி சிலைகள் வீதி உலா தினந்தோறும் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து 11-ம் தேதி வியாழக்கிழமை அதிகாலை சித்சபையில் (கருவறை) இருந்து நடராஜர், சிவகாமசுந்தரி சாமி சிலைகள் ஊர்வலமாக கோவிலில் இருந்து பக்தர்கள் தோளில் தூக்கியவாறு எடுத்துவரப்பட்டு காலை 6 மணிக்கு தேரில் ஏற்றினார்கள்.  இதனைத் தொடர்ந்து தேர் திருவிழா காலை 8 மணிக்கு மேல் தொடங்கியது.  தேர் சிதம்பரம் நகரில் முக்கிய வீதிகளான கீழவீதி தெற்கு வீதி மேலவீதி வடக்கு வீதி வழியாக சென்று இன்று மாலை 5 மணியிலிருந்து 6 மணிக்குள் தேர் நிலையை அடையும். தேர் தெருக்களில் செல்லும் போது நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி தேருக்கு தல 2 கிராம் தங்கக் காசு கொடுத்து பல்வேறு தரப்பினர் மண்டகப்படி செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் தேரில் இருந்து சாமி சிலைகள் இறக்கப்பட்டு பக்தர்கள் தோளில் சுமந்தவாறு ஊர்வலமாக எடுத்துச் சென்று கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்படும்.  இதனைத் தொடர்ந்து இரவு லட்சார்ச்சனை நடைபெறும். வெள்ளிக்கிழமை அதிகாலை ஆயிரங்கால் மண்டபத்தில் மகா அபிஷேகம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியிலிருந்து 4 மணிக்குள் ஆனி திருமஞ்சன தரிசன விழா நடைபெறும்.

இந்நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும். உலக நாடுகளில் இருந்தும் சிவ பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்வார்கள்.

Next Story

22 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த உடல்; சஸ்பென்ஸ் கொடுத்த இயற்கை

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
Trekker's body found after 22 years; Nature gave suspense

22 ஆண்டுகளுக்கு முன்பு பனிக்கட்டி இடுக்குகளில் சிக்கிய மலையேற்ற வீரர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரு நாட்டில் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த மலையேற்ற வீரர் வில்லியம் என்பவர் கடந்த 2002 ஆம் ஆண்டு பெரு நாட்டில் உள்ள குவஸ்கேரம் என்ற பனிமலையில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தார். கடல் மட்டத்திலிருந்து சுமார் 5200 அடி மீட்டர் உயரத்தில் உள்ள பனிமலையில் பனிக்கட்டி இடுக்குகளில் வில்லியம்  சிக்கி உயிரிழந்தார். பனி சரிவில் அவரது உடல் மூடப்பட்டு இருந்த நிலையில் காவல்துறையில் கொடுக்கப்பட்ட புகாரையடுத்து பெரு நாட்டை சேர்ந்த மீட்பு வீரர்கள், காவல்துறையினர் மலையேற்ற குழுவினர் உதவியுடன் வில்லியமின் உடலை 22 ஆண்டுகளாக தேடி வந்தனர்.

22 ஆண்டுகளுக்கு பிறகு தற்பொழுது வில்லியமின் உடல் கைப்பற்றப்பட்டுள்ளது. தொடர் பனிப்பொழிவால் 22 ஆண்டுகளாக அவரது உடல் அழுகாமல் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் அவருடைய வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் அவருடைய உடைமைகள் அனைத்தும் அவர் அருகிலேயே இருந்தும் தெரிந்துள்ளது.