Skip to main content

சிதம்பரம் அருகே முதலை கடித்து ஒருவர் உயிர் இழப்பு

Published on 20/02/2018 | Edited on 20/02/2018
park

 

சிதம்பரம் அருகே நந்திமங்கலம் கிராமத்தை சேர்ந்த முனுசாமி(50) என்பவர் அந்த கிராம பகுதியில் அமைந்துள்ள கொள்ளிடம் ஆற்றில் குறித்துகொண்டு இருந்தார். அப்போது ஆற்றில் இருந்த இரண்டு முதலைகள் முனுசாமியை தொடை மற்றும் உடலில் பல பகுதிகளில் கடித்து குதறியது. வலி தாங்க முடியாமல் கூச்சல் போட்டதால் கிராம மக்கள் முனுசாமியை முதலையிடமிருந்து மீட்டனர். பின்பு அவரை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் உயிர் இழந்தார். இது குறித்து குமராட்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். உடற்கூறு ஆய்வுகாக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட வன அதிகாரி ராகுல் கூறுகையில் புதன் கிழமை முதலையை பிடிக்க ஏற்பாடுகள் செய்ய உத்திரவிட்டுள்ளதாக கூறினார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

ஊருக்குள் புகுந்த முதலை! பொதுமக்கள் பீதி!!

Published on 12/12/2018 | Edited on 12/12/2018

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சிவாயம் கிராமத்தில் புதன்கிழமை காலை சாலையில் பெரிய முதலை ஒன்று படுத்திருந்தது.  இதனை பார்த்த அப்பகுதிமக்கள் பயந்து ஓடினர். 

 

இதனையறிந்த அந்த பகுதி இளைஞர்கள் இந்த முதலையின் தலை மீது சனல் சாக்கை தண்ணீரில் நனைத்து போட்டனர். பின்னர் முதலை வேறு எங்கும் செல்லாதவாறு தூரத்தில் இருந்து முதலை மீது கயிற்றை போட்டு ஒரு மரத்தில் கட்டிவிட்டனர். 

 

v

 

பின்னர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பேரில் அங்கு வந்த வனத்துறையினர் கஜேந்திரன், புஷ்பராஜ் ஆகியவர் முதலை பிடிக்கும் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் உதவியுடன் அந்த முதலையை பிடித்து அருகில் உள்ள வக்கராமாரி  ஏரியில் விட்டனர்.  இந்த முதலை 10 அடி நீளமும் 100 கிலோ எடையும் உள்ளதாக கூறப்படுகிறது.

 

 

இதேபோன்று மழைகாலங்களில் அந்த ஏரியில் தண்ணீர் அதிகம் உள்ளபோது முதலைகள் ஊருக்குள் தொடர்ந்து வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது எனவே இப்பகுதியில் முதலை பண்ணை அமைத்து பாதுகாக்கவேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக அரசிடம் கோரிக்கை  வைத்து வருகிறார்கள்.