'Criticize only DMK and BJP'-Edapadi order?

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மளிகையில் இன்று (05/11/2024) நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Advertisment

அதிமுகவின் கிளைச் செயலாளர் முதல் பொதுச்செயலாளர் வரையிலான அனைத்து பதவிகளுக்கும் விரைவில் உட்கட்சி தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. டிசம்பர் மாதத்தில் அதிமுக பொதுக்குழு கூடுவதற்கு முன்பாகவே உட்கட்சி தேர்தலை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியது.

Advertisment

2026 சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி வியூகம், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப் பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இந்த கூட்டத்தில் திமுக, பாஜகவை தவிர மற்ற எவரையும் விமர்சிக்க வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளிடம் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.