திருச்சி பொன்மலைப்பட்டி கடை வீதியில் கடந்த 15ஆம் தேதி சின்ராஜ் (24) என்ற வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த பொன்மலை போலீசார், தனிப்படை அமைத்து படுகொலை செய்த பொன்னேரிபுரம் அலெக்ஸ், மேலகல்கண்டார் கோட்டை சரத் உள்ளிட்டோரைதேடிவந்தனர்.
இந்நிலையில்அலெக்ஸ், சரத், ஆல்வின் ஆகியோர் இன்று (18.09.2021) திருச்சி பொன்மலை காவல் நிலையத்தில் சரணடைந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. விசாரணைக்குப் பின்னர் 3 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்படுகின்றனர்.