ஈரோடு மாவட்டம், பவானி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மர்ம நபர்கள் சிலர் கத்தியால் குத்திக் கொலை செய்தசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஈரோடு பவானி சப் டிவிஷனைச் சேர்ந்த சக அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
சித்தோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கே.கே.நகரில் 6 சவரன் தங்க நகை ஆதாயத்திற்காகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், நிக்கோலஸ் தன்ராஜ் என்பவர் சம்பந்தப்பட்டிருக்கிறார் எனச் சம்பவம் நடந்த 10 மணி நேரத்திற்குள் கண்டு பிடித்தனர். இதனை கண்டுபிடித்ததோடு நிக்கோலஸ் தன்ராஜைகைதுசெய்து, திருடிய நகைகளையும் மீட்டுத் தந்தனர். இதையறிந்த கோயம்புத்தூர் சரக டிஐஜி முத்துசாமி 10 மணி நேரத்திற்குள் குற்றவாளியைக் கைது செய்த காவல் குழுவினரை வெகுவாகப் பாராட்டினார்.