கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி, நடிகர் விஜய் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடப்பு ஐ.பி.எல் ஆட்டத்தில், கொல்கத்தா அணிக்காக விளையாடியவர் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி. அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இவர், சுழற்பந்து வீச்சாளர். அவருக்கு கிரிக்கெட் மீதான காதலை தாண்டி நடிகர் விஜய் என்றால், கொள்ளை பிரியம். இந்நிலையில், இன்று நடிகர் விஜயை சந்தித்துப் பேசிய அவர், புகைப்படம் ஒன்றை அவருடன் இணைந்து எடுத்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றது. இவர் தமிழ் சினிமாவிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.