Advertisment

சென்னையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ; போக்குவரத்து மாற்றம்

 Cricket World Cup in Chennai; Traffic change

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளதையடுத்து மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

Advertisment

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் 36 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் உலகக்கோப்பை போட்டியில் மோதுகின்றன. சென்னையில் நடைபெறும் இந்த போட்டிக்கு ரசிகர்கள் அதிகம் வருவார்கள் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக சுமார் 2000 க்கும் மேற்பட்ட போலீசார் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து மாற்றமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இன்று நண்பகல் 12 மணியிலிருந்து இரவு 10 மணி வரைபோக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியா ஹாஸ்டல் சாலைக்கு பாரதி சாலையில் இருந்து வாகனங்கள் செல்லலாம். வாலாஜா சாலையிலிருந்து செல்ல அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பெல்ஸ் சாலை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால்பாரதி சாலையில் இருந்து செல்லலாம் வாலாஜா சாலையில் இருந்து செல்ல அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதி சாலையில் பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து கண்ணகி சிலை நோக்கி செல்ல அனுமதி இல்லை. பெல்ஸ் சாலை வழியாக வாலாஜா சாலை செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Australia Chennai India
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe