முருகனைப் பார்க்க மலையேறிச் சென்ற 'யார்க்கர்' நடராஜன்!

cricket player wents to palani!!

சேலம் மாவட்டத்திலுள்ள சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த நடராஜன், ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த நிலையில், முதல் முறையாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, கடந்த மாதம் நடந்த20 ஓவர் போட்டி, ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடர் ஆகிய மூன்று போட்டிகளிலும் களமிறங்கினார்.

இதில் 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இந்த வெற்றிக்கு நடராஜன் எடுத்த விக்கெட்டுகள் திருப்புமுனையாக அமைந்தது. இதன் மூலம், இந்திய அணியில் நிரந்தர இடம் பெறும் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டார்.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சொந்த ஊருக்குத் திரும்பிய நடராஜனுக்கு சின்னப்பம்பட்டி ஊர் மக்கள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பின் நடராஜன், பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்யவந்தவர் முன்னதாக அவர் மலை அடிவாரத்தில் உள்ள முடி காணிக்கை செலுத்தும் இடத்தில் மொட்டை அடித்துக்கொண்டார்.

அதன் பிறகு, மலைக் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார் அவருடன் அவரது பெற்றோர்கள் வந்திருந்தனர், ஒவ்வொரு வருடமும் பழனி கோவிலுக்கு வருவதைவழக்கமாகக் கொண்டிருப்பதாகவும் கிரிக்கெட் வரலாற்றில் தனக்கு மிகப் பெரிய வெற்றியை அளித்ததன் மூலம் அதற்கு நன்றிக் கடன் செலுத்தும் வகையில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

இப்படித் திடீரென கிரிக்கெட் வீரர் நடராஜன் முருகனை தரிசிக்க வந்தததைக் கண்டு ரசிகர்களும் பொதுமக்களும் திரண்டு வந்து நடராஜனுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

cricket PLAYER
இதையும் படியுங்கள்
Subscribe