Cricket match between school students; Prize distribution!

பீட்டர் நினைவு கோப்பை ஜே.ஆர்.எம் கிரிக்கெட் அகாடமி நடத்திய முதலாம் ஆண்டு பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி அத்திப்பட்டு ஏசிசி கிரிக்கெட் மைதானத்தில் இம்மாதம் 15ந் தேதி தொடங்கியது. இன்று இறுதிப்போட்டி நடைபெற்று பரிசு வழங்கப்பட்டது.

கிரிக்கெட் ரெட் பால் கொண்டு விளையாடப்பட்ட இந்த போட்டியானது மொத்தம் 30 ஓவர்களைக் கொண்டது. இந்த போட்டியில் மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்று, முதல் நான்கு அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றது. சென்னையில் உள்ள பல்வேறு பள்ளிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் டான்பஸ்கோ பள்ளி முதல் இரண்டு பரிசுகளை தட்டிச் சென்றது. இந்த அகாடமி நடத்திய மற்றொரு போட்டியானது சென்னை மேடவாக்கத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியினை ஜே.ஆர்.எம் கிரிக்கெட் அகாடமி சார்லஸ் ஒருங்கிணைத்தார்.