Advertisment

சட்டசபையில் கிரிக்கெட்..

 Cricket at Assembly

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

நேற்று தொடங்கிய பட்ஜெட் மீதான விவாதத்தில் அதிமுக எம்.எல்.ஏ செம்மலை பேசும்பொழுது எந்த இடர்கள் வந்தாலும் எடப்பாடி ''ஹார்டிக் சிக்ஸ்ர்'' அடிப்பார் என குறிப்பிட்டு பேசியிருந்தார். அதனையடுத்து இன்று இரண்டாம் நாள் விவாதத்தில் சிறப்பு நிதியாக 2000 ரூபாய் அறிவித்தது தேர்தலை குறிவைத்ததுதான் என திமுக எம்.எல்.ஏ பொன்முடி கூறினார். அப்போது நேற்று அதிமுக எம்.எல்.ஏ செம்மலை பேசியதற்கு பதில் கௌண்டர் கொடுக்கும் வகையில்இனி திமுக தலைவர் ஸ்டாலின் வீசப்போகும் பந்தில் ஆளும்கட்சி க்ளீன் போல்ட் ஆகும் எனவும் கூறினார் பொன்முடி.

அதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வீசும் பந்து ''நோ பாலாகத்தான்'' இருக்கும் என அமைச்சர்ஜெயகுமார் கூறினார். அதனையடுத்து பேசிய அமைச்சர் தங்கமணியோ மைதானத்திற்கு வந்து வீசப்படும் பந்துதான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். எதிர்க்கட்சி தலைவர் மைதானத்திற்கே வராமல் பந்தை வீசிக்கொண்டிருக்கிறார் என கூறினார்.இப்படி கிரிக்கெட் விளையாடும் தொனியில் இருதரப்பும்பேச அவ்வப்போது சட்டசபையில்சிரிப்பலைஏற்பட்டது.

assembly eps ops_eps Ponmudi thangamani
இதையும் படியுங்கள்
Subscribe