Published on 14/11/2021 | Edited on 14/11/2021

கரோனா கட்டுப்பாடுகளை நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில் தற்பொழுது 'முதல்வரின் முகவரி' என்ற புதிய துறையை உருவாக்கி அதற்கான அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர், முதலமைச்சரின் உதவி மையம், முதலமைச்சரின் தனிப்பிரிவு ஆகியவைகளை ஒன்றிணைந்தது 'முதல்வரின் முகவரி' என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'முதல்வரின் முகவரி' என்ற புதிய துறையின் சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முதல்வரின் முகவரி துறையில் மனுக்களுக்குத் தீர்வுகாண ஒற்றை இணையதள முகப்பு பயன்படுத்தப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.