Advertisment

போட்டி போட்டுக்கொண்டு முந்திச் செல்ல முயன்ற பேருந்துகள்; லாரி மீது மோதியதில் விபத்து!

Crashing into a truck on Buses competing and trying to overtake

Advertisment

வேலூர் அடுத்த கருகம்புத்தூர் பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், குடியாத்தத்தில் நெல் மூட்டைகளை இறக்கிவிட்டு செங்கல்பட்டு நோக்கி சென்ற லாரியின் ஜாயிண்ட் கட்டாகி சாலையின் ஓரம் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் குடியாத்தத்தில் இருந்து வேலூர் நோக்கி இரண்டு தனியார் பேருந்துகள் முன்னும் பின்னும் சென்றன. இரண்டு பேருந்துகளும் வேகமாக இயக்கப்பட்டதாகவும், ஒருவரை ஒருவர் முந்திச்செல்ல முயன்றுள்ளனர்.அப்போது ஒரு தனியார் பேருந்து, எதிர்பாராத விதமாக பழுதாகி நின்றுகொண்டிருந்த லாரியின் பின்பக்கம் மோதியுள்ளது. இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர் உட்பட சுமார் 15 பயணிகள்படுகாயம் அடைந்துள்ளனர்.

விபத்தை கண்ட அப்பகுதி மக்கள் ஓடிவந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டனர். மேலும், 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விரிஞ்சிபுரம் காவல் துறையினர், இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

accident Vellore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe