Skip to main content

போட்டி போட்டுக்கொண்டு முந்திச் செல்ல முயன்ற பேருந்துகள்; லாரி மீது மோதியதில் விபத்து!

Published on 12/06/2024 | Edited on 12/06/2024
Crashing into a truck on Buses competing and trying to overtake

வேலூர் அடுத்த கருகம்புத்தூர் பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், குடியாத்தத்தில் நெல் மூட்டைகளை இறக்கிவிட்டு செங்கல்பட்டு நோக்கி சென்ற லாரியின் ஜாயிண்ட் கட்டாகி சாலையின் ஓரம் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் குடியாத்தத்தில் இருந்து வேலூர் நோக்கி இரண்டு தனியார் பேருந்துகள் முன்னும் பின்னும் சென்றன. இரண்டு பேருந்துகளும் வேகமாக இயக்கப்பட்டதாகவும், ஒருவரை ஒருவர் முந்திச்செல்ல முயன்றுள்ளனர்.  அப்போது ஒரு தனியார் பேருந்து, எதிர்பாராத விதமாக பழுதாகி நின்றுகொண்டிருந்த லாரியின் பின்பக்கம் மோதியுள்ளது. இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர் உட்பட சுமார் 15 பயணிகள்  படுகாயம் அடைந்துள்ளனர். 

விபத்தை கண்ட அப்பகுதி மக்கள் ஓடிவந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டனர். மேலும், 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விரிஞ்சிபுரம் காவல் துறையினர், இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

தடுப்பு கட்டை மீது பள்ளி பேருந்து மோதி விபத்து; மாணவர்கள் காயம்

Published on 14/07/2024 | Edited on 14/07/2024
 School bus crashes into barricade; Students are injured

தடுப்பு கட்டையின் மீது மோதி அதிவேகமாக சென்ற தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பள்ளி மாணவ-மாணவிகள் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சம்பவம் கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தாகம் தீர்த்தாபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் வெல்டன் என்ற தனியார் பள்ளி பேருந்து சுமார் 33 பள்ளி மாணவர்களை ஏற்றுக்கொண்டு நயினார் பாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்தத் தனியார் பள்ளி பேருந்து சின்னசேலம் அருகே குரால் கைகாட்டி பகுதியில் விருத்தாசலம் - சேலம் சாலையில் வாகனங்கள் மெதுவாக செல்வதற்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு கட்டை மீது தனியார் பள்ளி பேருந்து மோதி பேருந்து கவிழ்ந்தது.

விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 15 மாணவ மாணவிகள் காயங்களுடன் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் படுகாயங்கள் அடைந்த ஐந்து மாணவ மாணவிகள் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு சிகிச்சையானது அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவ மாணவிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேரில் சந்தித்து அவர்களின் உடல்நலம் குறித்துக் கேட்டறிந்து தொடர்ந்து அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விபரங்களையும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், அரசின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட இந்தத் தனியார் பள்ளியின் மீது பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Next Story

தம்பியின் உடலை மீட்டுத் தாருங்கள்; ஆட்சியர் காலில் விழுந்து கதறிய அக்கா

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
sister asked collector to return body of her brother who passed away in Malaysia

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் பகுதியைச் சேர்ந்தவர் அனுன் தேவராஜ் (39). இவர் எலக்ட்ரீசியன் வேலை தேடி மலேசியா சென்ற நிலையில் அங்கு இன்று காலை திடீரென உயிரிழந்துள்ளார். அவரது உடலை மீட்டுத்தரக்கோரி இன்று காட்பாடி அடுத்த சேவூர் பகுதியில் நடைபெற்ற ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் மனு அளிக்க வந்த உயிரிழந்த அணு தேவராஜன் சகோதரி விக்டோரியா மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி காலில் விழுந்து கதறி விழுந்த காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

“எப்படியாவது எனது தம்பியின் உடலை மீட்டுத் தாருங்கள்..” எனக் கோரிக்கை வைத்து மயக்கம் அடைந்து கீழே விழுந்ததால் அவரை மருத்துவர்கள் பரிசோதித்துப் பிறகு அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு சிகிச்சையாக அழைத்துச் சென்றனர். இங்கிருந்து தூதரகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பதிலளித்துள்ளார்.