
அரக்கோணம் அருகே கோவில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
அரக்கோணம் கீழ்வீதியில் திரௌபதி அம்மன் கோவிலில்திருவிழாநடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது ராட்சத கிரேன் மூலம் சாமிக்கு மாலை செலுத்து முயற்சித்த போது எதிர்பாராத விதமாக கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலர் காயமடைந்த நிலையில், பலத்த காயமடைந்த முத்து, பூபாலன், ஜோதிபாபு ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Follow Us