
அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக ஆங்காங்கே ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை சென்னையிலிருந்து அரக்கோணம் நோக்கி வந்த மின்சார ரயில் சுமார் 7 மணி அளவில் அரக்கோணத்தின் மூன்றாவது நடைமேடைக்கு வந்து சேர இருந்தது. அப்பொழுது தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக புளியமங்கலம் ரயில் நிலையத்திலேயே ரயிலானது நிறுத்தப்பட்டது. உடனடியாக அரக்கோணம் ரயில் நிலையத்திற்குத்தகவல் தெரிவிக்கப்பட நிலையில் ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்குச் செல்லக்கூடிய விரைவு ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்திலேயே சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மின்சார ரயில்களும், புறநகர் மின்சார ரயில்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட ரயில்கள் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அன்றாட பணிக்குச் செல்வோர் மற்றும் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
Follow Us