style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இரண்டு மணி நேரங்கள் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளித்திருந்தது உச்சநீதிமன்றம். எந்த இரண்டு மணிநேரம் என்பதை அந்தந்த அரசுகளே முடிவுசெய்து கொள்ளட்டும் எனவும் தெரிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து தமிழக அரசு காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் நேரத்தை நிர்ணயித்திருந்தது. இந்த நேரத்தை மீறுபவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 188ன் கீழ் 6 மாதம் வரை சிறை தண்டனை அல்லது 200 முதல் 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
மத்தாப்பு, ராக்கெட் ஆகியவற்றை வெடிக்க தடையில்லை என்ற தகவல் உண்மையல்ல என தீயணைப்புத்துறை கூறியுள்ளது.மேலும் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்கப்படும் எனவும் காவல்துறை கூறியிருந்தது. இந்நிலையில் அனுமதியற்ற நேரத்தில் பட்டாசு வெடித்ததாக தமிழகத்தில் 2,372 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.