Advertisment

பட்டாசு வெடிக்க இன்றும் மாலை ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதி - காவல்துறை

உச்சநீதிமன்றம் பட்டாசு வெடிப்பதற்கான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதில் முக்கியமானது பட்டாசு வெடிக்கும் நேரம். இரண்டு மணி நேரங்கள் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளித்திருந்தது உச்சநீதிமன்றம். எந்த இரண்டு மணிநேரம் என்பதை அந்தந்த அரசுகளே முடிவுசெய்து கொள்ளட்டும் எனவும் தெரிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து தமிழக அரசு காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் நேரத்தை நிர்ணயித்திருந்தது. இந்த நேரத்தை மீறுபவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 188ன் கீழ் 6 மாதம் வரை சிறை தண்டனை அல்லது 200 முதல் 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Advertisment

cc

தமிழகத்தில் இந்தக்கட்டுப்பாடு இன்றும் தொடருமென காவல்துறை அறிவித்துள்ளது. வடஇந்தியர்கள் இன்று தீபாவளி கொண்டாடுவதால் காவல்துறை இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்தால் இன்றும் வழக்குபதியப்படும் என்றும் அறிவித்துள்ளது. நேற்று திருநெல்வேலியை அடுத்த சேரன்மாதேவியில் தடைசெய்யப்பட்ட நேரத்தில் பட்டாசு வெடித்ததாக 108 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment
crackers police Supreme Court Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe