Advertisment

பட்டாசு ஆலை விபத்து- பலி 20 ஆக அதிகரிப்பு!

crackers plant incident peoples virudhunagar district

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

Advertisment

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலுகா- அச்சங்குளத்தில், சந்தனமாரி என்பவருக்குச் சொந்தமான ஸ்ரீ மாரியம்மாள் ஃபயர் ஒர்க்ஸில், ஃபேன்ஸி ரகப் பட்டாசுகள் தயாரித்தபோது, வெடிமருந்து உராய்வின் காரணமாக, பிப்ரவரி 12- ஆம் தேதி பிற்பகல் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர், காவல்துறையினர்,மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளைத் துரிதப்படுத்தினர். மேலும், இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

இந்த விபத்தில் 10- க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் 30- க்கும் மேற்பட்டோர் சாத்தூர், சிவகாசி உள்ளிட்ட பல்வேறு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இதில் பலரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வனராஜா என்பவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனால் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.அதேபோல், பல்வேறு மருத்துவமனைகளில் 17 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

crackers plant incident Virudhunagar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe