/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hand-in_137.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே இறுதி ஊர்வலத்தின்போது வெடி போட்டவர் மீது பட்டாசுகள் வெடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள புகைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவரின் இறுதி ஊர்வலம் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. அந்த ஊர்வலத்தில், அதே ஊரைச் சேர்ந்த கணேசன் மகன் அய்யனார் என்பவர் வானவேடிக்கைவெடிகள் வெடித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென பட்டாசு வெடித்ததில் அய்யனார் உடல் முழுவதும் தீ காயங்கள் ஏற்பட்டு உடல் கருகியது. அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர் சிகிச்சைக்குச் சேர்த்தனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து எலவாசனூர் கோட்டை காவல் நிலையத்தில் இறந்துபோன அய்யனார் மனைவி சரோஜா அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)