Crackers fire accident

Advertisment

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகரில் உள்ள கிடங்கல் பகுதியில் உள்ள சந்தோஷ் என்பவரின் கூரை வீட்டின் மீது ராக்கெட் பட்டாசு விழுந்து வெடித்ததில் வீடு தீக்கிரையானது. இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர்.

இதே போல் விழுப்புரம் அருகில் உள்ள ப.வில்லியனூரில் அரிகிருஷ்ணன் வீடு, கோட்டக்குப்பம் முதலியார் சாவடி பகுதியில் உள்ள சுகுமார் வீடு ஆகியவை பட்டாசு வெடித்துச் சிதறியதில் தீக்கிரையானது. விழுப்புரம் நகரப் பகுதி ஒட்டி உள்ள பகுதிகளில் ஐந்து வீடுகள் பட்டாசு வெடித்ததில் தீப்பிடித்து எரிந்துள்ளது.