cracker company fire in cuddalore

Advertisment

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குறுங்குடி கிராமத்தில் செயல்பட்டுவந்த பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலையில் இன்று 9 பேர் பணியில் இருந்துள்ளனர். அப்போது திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பெண் உட்பட 5 பேர் சம்பவ இடத்தில் உடல் கருகிஉயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் கவலைக்கிடமான நிலையில் காட்டுமன்னார்கோவில் மற்றும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்து குறித்து இதுவரை எந்த விபரமும் சரியாக தெரியவில்லை. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் மீட்புப் பணியில்ஈடுபட்டுவருகிறார்கள். இது முதற்கட்ட தகவலாக உள்ளது. மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என விபத்தை நேரில் கண்டவர்கள் கூறுகிறார்கள்.