கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஸ்ரீகாயத்ரி மெட்ரிக் பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் ரம்யா என்பவர் ஒருதலை காதலால் நேற்று முன்நாள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

Advertisment

 Police alert!

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

இது சம்மந்தமாக குறிஞ்சிபாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அவ்வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளி விருத்தகிரி ராஜசேகரன் என்பவரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் காவல் நிலைய தொப்பையாங்குளம் அருகில் ராஜசேகர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதையடுத்து தகவல் கிடைத்து விசாரணை மேற்கொள்ளபட்டு வருகிறது.

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் படிக்கும் பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஆண் நபர்களால் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் உடனடியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பயப்படாமல் காவல்துறைக்கு புகார் கொடுக்கலாம் என்றும், புகாரின் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் காவல் துறை எச்சரித்துள்ளது.

Advertisment

கடலூர் மாவட்டத்தில் இதுபோன்ற சம்பவத்தின் அடிப்படையில் கொடுத்த புகார்களின் மீது வழக்குகள் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் காவலர்கள் தெரிவித்துள்ளது.