பத்மாவுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளித்திட வேண்டும் - சிபிஎம் வலியுறுத்தல்

ச்

’’மதுரையைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த பத்மா என்பவர், ஊத்தங்கரையில் ஆயுதப்பயிற்சி வழங்குவதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் 23 பேருடன் சேர்த்து கைது செய்யப்பட்டார். இவர் மோசமான இதய நோயினால் பாதிக்கப்பட்டவர். வழக்கு விசாணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராக காரணத்தால் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு இம்மாதம் 7ம் தேதி நீதிமன்றத்தில் சரணடைந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் இவருக்கு இதய நோய் மோசமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு முறையான சிகிச்சை அளிக்காமல் மீண்டும் சிறையிலடைக்கப்பட்டு திரும்பவும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பெண் என்றும் பாராமல் இதய நோயாளியான பத்மாவை உயிருக்கு ஆபத்தான நிலையிலும் உரிய சிக்சை அளிக்காமல் சிறைக்கும் மருத்துவமனைக்கும் அலைக்கழிப்பது மனித உரிமை மீறிய செயலாகும். வழக்குகளின் தன்மை எப்படியிருந்தாலும் சிறையில் உள்ளவர்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

எனவே, இவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்ற தேவையான நடவடிக்கைளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.’’என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுத்தியுள்ளார்.

bala
இதையும் படியுங்கள்
Subscribe