Advertisment

பள்ளி மாணவியை கொலை செய்த குற்றவாளிளை உடனே கைது செய்ய சிபிஎம் வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே 13 வயது பள்ளி மாணவியை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்து உரிய தண்டனை பெற்றுக்கொடுக வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

Advertisment

கந்தர்வகோட்டை அருகே நொடியூரைச் சேர்ந்தவர் பன்னீர். இவரது மகள் மோனிகா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) (13). எட்டாம் வகுப்பு பள்ளி மாணவியான இவர் கடந்த திங்கள்கிழமை காலையில் அருகில் உள்ள குளத்திற்கு தண்ணிர் எடுக்கச் சென்றுள்ளார். வெகுநேரமாகியும் வீடு திரும்பாததைத் தொடர்ந்து உறவினர்கள் தேடிச் சென்றனர். அப்போது அருகில் உள்ள காட்டுப் பகுதியில் உடலில் காயங்களுடன் சிறுமி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார்.

Advertisment

CPM urges immediate arrest in pudukottai incident

சிறுமியை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைப் பலனின்றி அன்று இரவு பரிதாபமாக இறந்துவிட்டார். சிறுமியின் சாவுக்கு காரணமாகவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சிபிஎம், மாதர் சங்தக்தினர் தலைமையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாக போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் குற்றவாளிகளை தனிப்படை அமைத்து விரைவில் கண்டுபிடிப்பதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து உறவினர்களிடம் உடல் பெற்று அடக்கம் செய்தனர். ஆனால், சம்பவம் நடந்து மூன்று நாட்கள் ஆகியும் குற்றவாளிகள் கண்டுபிக்கப்படவில்லை.

இந்நிலையில், புதன்கிழமையன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பினர்கள் க.செல்வராஜ், ஒன்றியச் செயலாளர் வி.ரெத்தினவேல், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ராமையன், ஒன்றியச் செயலாளர் பி.வீராச்சாமி, மாதர் சங்க மாவட்டத் தலைவர் பி.சுசீலா, செயலாளர் டி.சலோமி, துணைச் செயலாளர் கே.நாடியம்மை, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கர்ணா, ஒன்றியச் செயலாளர் இளையராஜா உள்ளிட்டோர் இறந்த சிறுமியின் வீட்டுக்கு சென்று பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் கூறும்போது: ஊரடங்கு காலத்தில் இதுபோன்ற குற்றச்செயல் நடந்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது. மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீரழிந்து உள்ளது என்பதற்கு இதுவொரு உதாரணம். அரசு டாஸ்மாக் கடைகளைத் திறந்து விட்டபிறகு சாலை விபத்து, கொலை, கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாத ஆட்சியாளர்களால் இத்தகைய அவலங்கள் அரங்கேறிக்கொண்டு இருக்கிறது.

13 வயது பள்ளி மாணவியின் மரணம் மிகுந்த வேதனைக்குறியது. குற்றவாளிகள் உடனடியாக கைது செய்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரண நிதி வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

arrest cpm Pudukottai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe